ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி துவக்கம்
ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி துவக்கம்
ஓசூர்:ஓசூர், காமராஜ் காலனியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி (தமிழ், ஆங்கில வழி) இயங்கி வருகிறது. இங்கு, ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, 1,230 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு, 8 கூடுதல் வகுப்பறைகள் கட்ட, கட்டுமான பொருட்களை கொண்டு வர, பள்ளியின் காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதியை ஒப்பந்ததாரர் இடித்து அகற்றினார். பணிகள் முடிந்தும், காம்பவுண்ட் சுவரை, கட்டி கொடுக்கவில்லை. கட்டுமான பணிக்காக பள்ளியில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்கள் கழற்றி வைக்கப்பட்டன. நாய்கள் கூட்டம் பள்ளிக்குள் நுழைந்து வந்தது. இடிக்கப்பட்ட காம்பவுண்ட் சுவர் வழியாக பள்ளியில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்தது.
பள்ளிக்குள் புகுந்து ஸ்பீக்கர் இணைப்புகள் மற்றும் மேடையின் கூரை போன்றவற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இது தொடர்பாக கடந்த மாதம், 26ல், 'காலைக்கதிர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம், கல்வி நிதியில் இருந்து உடனடியாக, 5 லட்சம் ரூபாய் ஒதுக்கி, பள்ளிக்கு காம்பவுண்ட் சுவருடன் கூடிய இரும்பு கேட் மற்றும் பள்ளிக்கு தேவையான தண்ணீர் தொட்டி கட்டும் பணி ஆகியவற்றை நேற்று துவங்கியது. இதனால், மாணவ, மாணவியரின் பெற்றோர் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
மேலும்
-
தொழில் நிறுவன அதிகாரியிடம் ரூ. 5 கோடி மோசடி செய்தவர் கைது
-
ஒப்பந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
-
திறக்கப்படாத தாவரவியல் பூங்கா பேட்டரி கார்களில் ஆடியோ செட் திருட்டு தண்டவாளங்கள் துருப்பிடித்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி
-
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
-
குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய நிர்வாகிகள் கவர்னருடன் சந்திப்பு
-
ஸ்கூட்டி வழங்கல்