டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டுரூ.2 லட்சம் மதிப்பு மதுபானம் திருட்டு
டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டுரூ.2 லட்சம் மதிப்பு மதுபானம் திருட்டு
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அடுத்த திம்மசந்திரம் அருகே, சுரேஷ் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மூர்த்தி, 47, விற்பனையாளராக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், டாஸ்மாக் கடைக்கு வெளியே வைத்திருந்த, 'சிசிடிவி' கேமராக்களை வேறு புறமாக திருப்பி விட்டு, கடையின் பின்பக்க சுவற்றை உடைத்து ஓட்டை போட்டு உள்ளே புகுந்தனர்.
கடையில் இருந்த விலை உயர்ந்த, 16 பெட்டிகளில் இருந்த மதுபானங்கள், பீர்பாட்டில்களை திருடி சென்றனர். இதன் மதிப்பு, 2 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.
நேற்று காலை, 9:30 மணிக்கு கடையை திறக்க வந்த ஊழியர்கள், சுவற்றில் துளை போடப்பட்டு மதுபானம் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி., ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தேன்கனிக்கோட்டை போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும்
-
தொழில் நிறுவன அதிகாரியிடம் ரூ. 5 கோடி மோசடி செய்தவர் கைது
-
ஒப்பந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
-
திறக்கப்படாத தாவரவியல் பூங்கா பேட்டரி கார்களில் ஆடியோ செட் திருட்டு தண்டவாளங்கள் துருப்பிடித்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி
-
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
-
குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய நிர்வாகிகள் கவர்னருடன் சந்திப்பு
-
ஸ்கூட்டி வழங்கல்