எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமான கட்டடங்கள்

சிவகாசி : சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் 100 க்கும் மேற்பட்ட புற நோயாளிகளாக வருகின்றனர். 20 க்கும் மேற்பட்டோர் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய குடியிருப்பு, அலுவலக கட்டடங்கள் உள்ளது. இந்தக் கட்டடங்கள் சேதம் அடைந்து விழும் நிலையில் உள்ளது. இக்கட்டடங்களை சுற்றிலும் முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. தவிர இதில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்களின் இருப்பிடமாக பயன்படுத்துகிறது. இவைகள் அவ்வப்போது வெளியில் நடமாடி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
சேதமடைந்த கட்டடங்களின் மேல் பகுதியில் இந்தக் கட்டடம் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என எழுதி ஒட்டி உள்ளனர். ஆனால் வாசிக்கத் தெரியாத மக்களுக்கு இது குறித்து அறிவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் குழந்தைகள், பெரியவர்கள் கட்டடத்தின் அருகே நடமாடுகின்றனர். அப்போது கட்டடம் இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சேதம் அடைந்த கட்டடங்களை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
போனில் பேச விடாமல் இடையூறு செய்ததால் கடுப்பில் மாணவியை கடித்த விடுதி சமையலர்
-
ஆம்னி பஸ் கவிழ்ந்து மாற்று டிரைவர் பலி
-
தனியார் கல்குவாரியில் கலெக்டர், எஸ்.பி., ஆய்வு
-
சிறுதானிய விவசாயிகளுக்குவேளாண் மாணவியர் பயிற்சி
-
மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்ட பூஜை
-
பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமில்லா கழிப்பறைக்கு ரூ.5,000 அபராதம்