மாவட்ட ஊஷூ போட்டி மாணவர்கள் பங்கேற்பு

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்ட ஊஷூ அசோசியேசன் சார்பில் 13வது சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளுக்கு மாவட்ட அளவிலான ஊஷூ போட்டி நடந்தது.

விழுப்புரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணைய பல்நோக்கு உள் விளையாட்டரங்கில் நடந்த போட்டியை, தமிழ்நாடு ஊஷூ அசோசியேசன் மாநில துணை தலைவர் ஜின்ராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

மாவட்ட துணைத் தலைவர் முருகன், செயலாளர் நவக்கொடி நாராயணமூர்த்தி, துணைச் செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தனர்.

போட்டியில் வெற்றி பெறுவோரை நடுவர்களாக கோகுலேஷ், சூர்யா தேர்வு செய்தனர்.

இதில், 12, 14, 16 மற்றும் 18 வயதிற்குட்பட் டோர் பிரிவில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

வெற்றி பெற்றோருக்கு பரிசும், சான்றிதழும், பங்கேற்றோருக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

போட்டியில் 4 பிரிவுகளில் முதலிடத்தை பிடித்தவர்கள், விரைவில் நடைபெறவுள்ள மாநில ஊஷூ போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளனர். போட்டியை பொருளாளர் ஜெயச்சந்திரன் ஒருங்கிணைத்தார்.

Advertisement