சிவகங்கை -- மேலுார் டவுன் பஸ் டிஜிட்டல் போர்டில் பிழை : பயணிகள் அதிர்ச்சி * பயணிகள் அதிர்ச்சி

சிவகங்கை : சிவகங்கை -- மேலுார் இடையே செல்லும் அரசு பஸ் டிஜிட்டல் போர்டில், இடையமேலுார் பெயரை இடையநல்லுாராக மாற்றி பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலுார் கிளையில் இருந்து சிவகங்கைக்கு (டி.என்.,58 என் 2878) புதிய பஸ் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்சில் மேலுாரில் இருந்து சிவகங்கைக்கு இடைப்பட்ட கிராமங்களின் பெயரை டிஜிட்டல் போர்டிலும், பஸ் பக்கவாட்டிலும் எழுதியுள்ளனர்.
அதில், டிஜிட்டல் போர்டில் இடையமேலுார் கிராம பெயருக்கு மாற்றாக இடைய நல்லுார் என வெளியாகி வருவது பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதை மேலுார் கிளை மேலாளர் உட்பட அலுவலர்கள் கவனிக்காமல் இருக்கின்றனர்.
இது குறித்து பஸ் டிரைவர் கூறியதாவது, பஸ் பாடி பில்டிங் செய்யும் போதே, டிஜிட்டல் போர்டில் கிராமத்தின் பெயர் வெளியிடுகின்றனர்.
கிராம பெயர் தவறை அதிகாரிகள் தான் கவனிக்க வேண்டும், என்றார்.