ரெனோ நிஸான் ஆலையை கையகப்படுத்தியது ரெனோ

சென்னை:'ரெனோ நிஸான்' உற்பத்தி ஆலையில், நிஸான் நிறுவனம் வைத்துள்ள 51 சதவீத பங்குகளை, ரெனோ நிறுவனம் கையகப்படுத்த இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஒரகடம் தொழிற்பேட்டையில், ரெனோ - நிஸான் கூட்டணியில், 2008ல் கார் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது. இந்த ஆலையில், ரெனோ நிறுவனம் 49 சதவீத பங்கையும், நிஸான் நிறுவனம் 51 சதவீத பங்கையும் வைத்திருந்தன. இந்நிலையில், நிதி நெருக்கடியின் காரணமாக, நிஸான் நிறுவன பங்குகளை, ரெனோ நிறுவனம் முழுமையாக கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இனிமேல், இந்த ஆலை ரெனோ நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டில் செயல்படும். கூட்டணி தொடர்வதால் நிஸான் கார்கள், ஆலையில் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும்.

Advertisement