தியாகராஜர் பொறியியல் கல்லுாரி காங்கோ நாடு புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருப்பரங்குன்றம் : மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார் சாலை தொழில்நுட்பத்தை காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் அமைக்க, அந்நாட்டுச் சுற்றுச்சூழல், நிலையான வளர்ச்சி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கல்லுாரி தாளாளர் ஹரி தியாகராஜன் வழிகாட்டுதலின்படி காங்கோ நாட்டில் நடந்த விழாவில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி டீன் பாலாஜி, வேதியியல் துறை பேராசிரியர் ராமலிங்க சந்திரசேகர், காங்கோ ஜனநாயக குடியரசின் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி அமைச்சர் மைத்ரோ ஈவ் பசைபாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

காங்கோ ஜனநாயக குடியரசின் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி அமைச்சகத்தின் மூத்த அரசு அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற்றனர்.

வாசுதேவன் கூறியதாவது: இந்த புதுமையான அணுகுமுறை நிலப்பரப்புகள் மற்றும் பெருங்கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கலக்கும் அளவை குறைப்பது மட்டுமல்லாமல் சாலை கட்டுமானத்திற்கான செலவுகளை குறைப்பதற்கு நிலையான தீர்வை வழங்குகிறது.

நிலையான வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் புதுமையான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ள காங்கோ அரசு உறுதி கொண்டுள்ளது. பிளாஸ்டிக் சாலை தொழில்நுட்பம் உட்கட்டமைப்பு துறையை மாற்றுவதற்கும் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் மகத்தான ஆற்றலையும் கொண்டுள்ளது. இந்த தொலைநோக்கு பார்வையை நனவாக்க மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து பணியாற்ற அவர்கள் விரும்புவதாக காங்கோ அமைச்சர் ஆர்வமுடன் தெரிவித்தார் என்றார்.

Advertisement