முருங்கை 20 டன் வரத்து

வெள்ளகோவில்; வெள்ளகோவில், முத்துார், காங்கயம், புதுப்பை உள்ளிட்ட பகுதியில் இருந்து சாகுபடி செய்யப்படும் முருங்கைகள் வெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையம் மூலம் சென்னை, கோவை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

நேற்று, 20 டன் வந்தது. செடி, மர முருங்கை, மூன்று ரூபாய்க்கும், கரும்பு முருங்கை, பத்து ரூபாய்க்கு விற்றது.

Advertisement