பெண்களுக்கு நிவாரணம்

திருப்பூர்; திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட, மூன்று பெண்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, கமிஷனர் ராஜேந்திரன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் கிறிஸ்துராஜ், பாதிக்கப்பட்ட, மூன்று பெண்களுக்கு நிவாரண நிதியாக தலா, 10 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டு, தையல் மெஷின், உபகரணங்கள் வழங்கி வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்யப்பட்டது.

Advertisement