விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலுார் : தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட குழு கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பரிமளா, சுரேஷ், கணேசன், தனம் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் துரை, மாநகர செயலாளர் நாகராஜ், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட தலைவர் குளோப் கண்டன உரையாற்றினர்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 4 மாதங்களாக கூலி வழங்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு 2024-25ம் நிதி ஆண்டில் தேசிய ஊரக வேலை திட்டத்திற்காக ஒதுக்கிய தொகையில் பாக்கி வைத்துள்ள 3,252 கோடி ரூபாயை உடனே வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் ரங்கசாமி, சூரியகாந்தி, கிருஷ்ணமூர்த்தி, அல்லியம்மாள், மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement