கம்பம் மருத்துவமனையில் சித்தா டாக்டர் இன்றி சிரமம்
கம்பம் : கம்பம் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவு உள்ளது. தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால் இங்கு டாக்டர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனால் தினமும் இப் பிரிவிற்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பது இல்லை.
இங்குள்ள மருந்தாளுநர் அவருக்கு தெரிந்த மருந்து மாத்திரைகளை கொடுத்து வருகிறார்.
முன்பு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் இருந்து மாற்றுப் பணியாக டாக்டர் வந்தனர். இப்போது அதுவும் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கம்பம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவிற்கு டாக்டர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement