போராட்டக்குழு ஆலோசனை கூட்டம்

தேனி : தேனி ஸ்ரீராம் நகர் திண்டுக்கல் குமுளி அகல ரயில் பாதை திட்டப் போராட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், குழுவின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார்.

செயலாளர்கள் மனோகரன், அந்தோணி பிரான்சிஸ், மெல்வின், முத்துபச்சைகுமார், மகாராஜன், பல்வேறு கிளைகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மார்ச் 23, 24ல் நடந்த தேனி முதல் திண்டுக்கல் வரை 75 கி.மீ., நடைப் பயணத்தில் பங்கேற்ற செயல்வீரர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விரைவில் டில்லி சென்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், துறை அதிகாரிகளை சந்தித்து திண்டுக்கல் --லோயர்கேம்ப் திட்டத்தை உடனே நிறைவேற்ற வலியுறுத்துவது, அடுத்தகட்டமாக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் அடையாள உண்ணாவிரதம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement