கார் - வேன் மோதல் இருவர் பரிதாப பலி

சாம்ராஜ் நகர் : சாம்ராஜ்நகர், குண்டுலுபேட் தேசிய நெடுஞ்சாலை 766ல் நேற்று காலை, டெம்போ டிராவலர்ஸ் வாகனம் தமிழகத்தின் ஊட்டிக்குச் சென்று கொண்டிருந்தது. பென்டகஹள்ளி கேட் அருகே எதிரே மைசூரை நோக்கி கார் ஒன்று வந்தது.
எதிர்பாராத விதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதின. காரின் முன்பகுதி முழுதுமாக நொறுங்கியது. பேகூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்தில் சிக்கிய காரில் பயணம் செய்து பலியான சஷித், 30, என்பவர் உடலை மீட்டனர். காயமடைந்த முஷ்கன், 19, என்ற பெண், குண்டுலுபேட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரணையில், ரம்ஜானையொட்டி கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் மைசூரு வந்தபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. விபத்தில் காயமடைந்த டெம்போ டிராவலர் டிரைவர் சாகர், 32, உட்பட ஒன்பது பேருக்கு குண்டுலுபேட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.