வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கருடன் வலம் வரும் நபர்கள் எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா?

வாகனங்களில் காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டினால் மோட்டார் வாகன சட்டத்தின் 198வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தாலும், திண்டிவனம் உட்கோட்ட பகுதியிலுள்ள பல இடங்களில், காவல்துறையில் பணியாற்றாத பலர், வாகனங்களின் முன்புறமும் மற்றும் பின்புறமும் போலீஸ் என்ற ஸ்டிக்கரை தில்லாக ஒட்டிக்கொண்டு பந்தாவாக சுற்றி வருகின்றனர்.

இவ்வாறு வலம் வரும் நபர்கள், போலீஸ் நிலையத்திற்கு நன்கு அறிமுகமானவராக இருப்பதால், சம்மந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.

இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி வருபவர்களை எஸ்.பி., கண்டறிந்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement