போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா பல்கலை., அரசு பொறியியல் கல்லுாரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி தகவல் தொழில் நுட்ப துறை பேராசிரியர் சீனுவாசன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட போதை பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் மலரவன், போதைப் பொருள் பயன்பாட்டின் பாதிப்புகளும், உடல் நலத்திற்கு கேடு, சமுதாய பாதிப்பு, போதை பொருள் பயன்படுத்துவோருக்கான தண்டனை, போதை பொருள் பயன்படுத்துவதிலிருந்து விடுபடுவது குறித்து விளக்கம் அளித்தார்.

கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement