சூதாடிய 5 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பணம் வைத்து சூதாடிய புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், சிவபிரகாசம், நடராஜன், சிவக்குமார், செல்வராஜ் ஆகிய 5 பேரும் தப்பியோடினர்.

உடன், அங்குகிடந்த 250 ரூபாய் மற்றும் புள்ளி தாள்களை பறிமுதல் செய்து, 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து தேடி வருகின்னர்.

Advertisement