போதையில் அட்டகாசம் வாகனங்களுக்கு தீ வைப்பு 4 இளைஞர்கள் கைது

மதுரை: மதுரை வில்லாபுரம், கீரைத்துறை பகுதியில் இளைஞர்கள் 4 பேர் போதையில் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, 3 கார்கள், ஒரு ஆட்டோ, இரு டூவீலர்களை சேதப்படுத்தினர்.
வில்லாபுரம் அகஸ்தியர் தெரு, கீரைத்துறை அம்பேத்கார் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதி இளைஞர்கள் 4 பேர் போதையில் சத்தம் போட்டுக்கொண்டு வந்தனர். வீடுகள் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டூவீலருக்கு தீ வைத்தனர். பின்னர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள், ஒரு ஆட்டோ, 2 டூவீலர்களை அடித்து சேதப்படுத்தினர்.
இதனால் பீதியடைந்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து தேடிச்சென்றனர். அரைமணி நேரத்தில் கீரைத்துறை எஸ்.ஐ., செல்வம் தலைமையிலான 5 போலீசார், கீரைத்துறை புதர் பகுதிக்குள் மறைந்திருந்த பாஸ்கர் 19, ஆல்வேஸ்வரன் 20, முருகன் 19, சக்திவேல் 19, ஆகியோரை கைது செய்தனர். அவர்களை அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.
மேலும்
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி