மதுரையில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை

மதுரை: மதுரையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

கோரிப்பாளையம், மகபூப்பாளையம், தெற்குவாசல், ஹாஜிமார் தெரு உட்பட பல பகுதிகளில் திரளான முஸ்லிம்கள் தொழுகையில் பங்கேற்றனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

* திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். அங்கு தொழுகைக்குச் சென்றவர்களை சோதனை செய்து, விவரங்களை பதிவு செய்த பின்பே போலீசார் அனுமதித்தனர். வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நடந்த தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

* எழுமலை பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. மதநல்லிணக்கம், தேச ஒற்றுமையை வலியுறுத்தி ஜமாத் தலைவர் பக்ருதீன், செயலாளர் அப்துல்ரஹீம்சேட் தலைமையில் சிறப்பு ஊர்வலம் நடந்தது. உசிலம்பட்டி கீழப்பள்ளிவாசல், மேலப்பள்ளிவாசல், உத்தப்பநாயக்கனுார், தொட்டப்பநாயக்கனுாரிலும் தொழுகை நடந்தது.

Advertisement