பெண் பலி

மேலுார்: சிங்கம்புணரி குமரிபட்டி ரமேஷ் மனைவி நந்தினி 34, ரமேஷ் வெளிநாட்டில் பணிபுரிவதால் நந்தினி அட்டப்பட்டியில் அம்மா சுசீலா 55, வீட்டில் இரு குழந்தைகளுடன் தங்கி தனியார் மருந்து கடையில் வேலை பார்த்தார்.

நேற்று இரவு மேலுாரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சி முடிந்து சொந்த ஊருக்கு நந்தினி டூவீலரில் அம்மாவை அழைத்துச் சென்றார். செட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது பின்னால் மதுரை - திருச்சி நோக்கி சென்ற கார் மோதியதில் நந்தினி இறந்தார். சுசிலா காயத்துடன் மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி கார் டிரைவர் முகமது சபிக்கிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement