ஆசிரியர் கூட்டணி கூட்டம்

மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஊடகப் பிரிவு கூட்டம் நடந்தது. மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சீனிவாசன் வரவேற்றார்.

மாநில துணைப் பொதுச் செயலாளர் முருகன், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் டேவிட் ராஜன், சுதா முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் மயில் பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், பாலமுருகன், கமல் பங்கேற்றனர்.

மே 1 முதல் 3 வரை திண்டுக்கல்லில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநாடு நடக்கிறது. அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம், பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்போம் உள்ளடக்கிய மாநாட்டு 'லோகோ' வெளியிடப்பட்டது. மாநில பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.

Advertisement