மார்ச்சுவரியை சுற்றி வரும் 'அந்நியர்கள்'
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையின் மார்ச்சுவரி வளாகத்தில் மருத்துவமனை அல்லாத தனிநபர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
மார்ச்சுவரியில் தினமும் 15 முதல் 20 பிணக்கூறாய்வு நடக்கிறது. பிணக்கூறாய்வு செய்த பின் சடலத்தை இலவச அமரர் ஊர்தியில் சொந்தமாக கொண்டு செல்வதற்கும் சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இங்கு மார்ச்சுவரி பணியாளர்கள் அல்லாத சிலர் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை சடலத்தைப் பெற வரும் உறவினர்களிடம் வசூலில் ஈடுபடுகின்றனர்.
உடலை சுற்றுவதற்கு பாலிதீன் பை, ஆம்புலன்ஸ் சக்கரங்களில் வைப்பதற்கு நான்கு எலுமிச்சம்பழம், சடலத்திற்கான மாலை, பன்னீர் என ஒவ்வொருவரிடமும் ரூ.500 வரை வசூல் செய்கின்றனர். சில நேரங்களில் தனியார் ஆம்புலன்ஸ்களை உள்ளே கொண்டு வந்து ஏற்றுகின்றனர்.
உறவுகளை இழந்து சோகத்தில் இருக்கும் உறவினர்களிடம் வசூல் செய்யும் போது, சிலர் வேதனையில் குமுறுவதோடு மருத்துவமனை நிர்வாகத்திடமும் புகார் செய்கின்றனர்.
புகார்கள் குறித்து டீன் அருள்சுந்தரேஷ்குமார் கூறியதாவது:
பிணக்கூறாய்வு செய்ய எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. சடலத்தின் மேல் சுற்றப்படும் பஞ்சு, காடாத்துணி அனைத்தையும் அரசு இலவசமாக வழங்குகிறது.
நோய்த்தொற்று ஏற்படும் என்பதால் நாய்க்கடியால் இறந்தவர்களின் உடலை மட்டும் பாலிதீன் பையில் சுற்றித் தருகிறோம். எல்லாவற்றுக்கும் பாலிதீன் கவர் சுற்றித்தரவேண்டும் என்ற நடைமுறை இல்லை. பாலிதீன் கவர், மாலை, எலுமிச்சை விற்க இங்கு அனுமதியில்லை. மீறி விற்பனை செய்தால் அறிவிப்பு பலகையில் உள்ள அலைபேசி எண்ணில் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சுகாதாரத்துறை இணை இயக்குநர் செல்வராஜ் கூறுகையில்,
''மதுரை மாவட்டத்திற்கு 10 அமரர் ஊர்திகள் உள்ளன. மார்ச்சுவரியில் பிணக்கூறாய்வு செய்த பின் போலீசார் தரும் தகவல் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் ஊர்தியை அந்தந்த ஊர்களுக்கு இலவசமாக அனுப்புகிறோம்.
இதற்கு கட்டணமில்லை. யாராவது வசூலித்தால் 73977 24860ல் புகார் தெரிவிக்கலாம்'' என்றார்.
மேலும்
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி