ஒரு போன் போதுமே

குப்பை தொட்டியை அகற்றுங்க

மதுரை சொக்கிக்குளம் உழவர்சந்தை அருகே தொட்டிகளில் குப்பை நிரம்பி உள்ளன. ரோட்டை மையமாக கொண்டு போக்குவரத்து இடையூறாகவும், காற்று மாசுபாட்டுடன் நோய்த்தொற்று ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- கருணாகரன், நரிமேடு.

குடியிருப்புக்குள் நீர்

மதுரை கூத்தியார்குண்டு கண்மாய் நீர் குடியிருப்புக்குள் வருகிறது. தண்ணீர் வீடுகள், அலுவலகங்களுக்குள் செல்வதை தடுக்க வேண்டும். குடியிருப்புக்குள் வருவதால் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளதுடன், நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

-- சிவமுருகன், கூத்தியார்குண்டு.

ரோட்டில் குப்பை

மதுரை கே.கே. நகர் விநாயகர் நகர் தெருவில் ரோட்டில் குப்பை கழிவுகளாக கிடக்கிறது. அருகே ஓட்டல்கள், மருத்துவமனைகள், அலுவலங்கள் உள்ளன. சுகாதார சீர்கேடுடன் நோய்த்தொற்று அபாயமும் ஏற்படுகிறது. விரைவில் துாய்மைப் படுத்த வேண்டும்.

-- கார்த்திக், கே.கே. நகர்.

Advertisement