பஸ் ஸ்டாப் முன் ஆட்டோக்கள்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் கேட்டுக்கடை - பாலமேடு ரோட்டில் பஸ் ஸ்டாப் நிழற்குடை முன் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இந்த பஸ் ஸ்டாப்பில் பாலமேடு உள்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் நின்று செல்கின்றன.

இங்கு அதிகளவில் நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்களால் பயணிகளுக்கு மட்டும் இன்றி போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாப்பை மறைத்து நிற்கும் ஆட்டோக்களை கடந்து பஸ்களை பிடிக்க செல்ல பயணிகள் சிரமப்படுகின்றனர்.

ஆட்டோக்களை கடந்து நிற்கும் பஸ்களால் எதிரே வரும் வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கிறது. அதேபோல் கேட்டுக்கடை பாலத்தின் இருபுறமும் தக்காளி, வெங்காய காய்கறி ஆட்டோக்கள் பகல் முழுவதும் நிறுத்தப்பட்டு வியாபாரம் நடக்கிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement