குறுந்தொழிலை பாதுகாக்க தனி அமைச்சகம்: தமிழக அரசுக்கு தொழில்முனைவோர் கோரிக்கை

சென்னை; தொழில்முனைவோரின் கோரிக்கையை ஏற்காமல், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டு அளவை மாற்றம் செய்து, மத்திய அரசு பிறப்பித்துள்ள ஆணையால், குறுந்தொழில்கள் முடங்கும் அபாயம் உருவாகிஉள்ளது.
எனவே, குறுந்தொழில் களை பாதுகாக்க தனி அமைச்சகம் உருவாக்குமாறு, தமிழக அரசை, தொழில்முனைவோர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, சிறு, குறுந்தொழில் துறையினர் கூறியதாவது:
மத்திய அரசின் பட்ஜெட்டில், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான முதலீடு மற்றும் விற்றுமுதலில் மாற்றம் செய்யப்பட்டது.
வலியுறுத்தல்
அதில் முதலீட்டில், 2.50 கோடி ரூபாய்; ஆண்டு விற்றுமுதலில், 10 கோடி ரூபாய்க்கும் கீழ் இருந்தால் குறு நிறுவனம்; 25 கோடி ரூபாய் - 100 கோடி ரூபாய்க்கு கீழ் இருந்தால் சிறு நிறுவனம்; 125 கோடி ரூபாய் - 500 கோடி ரூபாய்க்கு கீழ் இருந்தால் நடுத்தர நிறுவனம் என, அறிவிக்கப்பட்டது.
இதை திரும்ப பெற்று, ஏற்கனவே இருந்தது போல், 1 கோடி ரூபாய் முதலீடு; 5 கோடி ரூபாய் வரை விற்றுமுதல் இருந்தால் அவை குறு நிறுவனம், 10 கோடி ரூபாய் - 50 கோடி ரூபாய் வரை சிறு நிறுவனம், 50 கோடி ரூபாய் - 250 கோடி ரூபாய் வரை நடுத்தர நிறுவனமாக தொடர அனுமதிக்குமாறு வலியுறுத்தப் பட்டது.
அதை ஏற்காமல், ஏப்., 1 முதல் புதிய முறை அமலுக்கு வருவதாக, மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
கடந்த டிச., நிலவரப்படி, மத்திய அரசின், 'உத்யம்' தளத்தில், தமிழகத்தை சேர்ந்த, 30.33 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. அதில், 29.68 லட்சம் குறு நிறுவனங்கள். சிறு நிறுவனங்கள் 59,534, நடுத்தர நிறுவனங்கள் 5,313.
பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசின், 'ஜெம் போர்ட்டல்' இணையதளம் வாயிலாக, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்குகின்றன.
கடினம்
புதிய முறையால், 500 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டி வந்த பெரிய நிறுவனங்கள், இனி, சிறு, குறு, நடுத்தர பிரிவில் இடம்பெற்று, அதிக ஆர்டர்களை பெறும். இதனால், குறுந்தொழில்களுக்கு ஆர்டர் கிடைப்பது கடினமாகும்.
அவை, மூடப்படும் அபாயம் உருவாகிஉள்ளது.
எனவே, குறுந்தொழில்களை பாதுகாப்பதற்கு தமிழக அரசு அதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கி, அந்த தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய முறையால், 500 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டி வந்த பெரிய நிறுவனங்கள், இனி, சிறு, குறு, நடுத்தர பிரிவில் இடம்பெற்று, அதிக ஆர்டர்களை பெறும். இதனால், குறுந்தொழில்களுக்கு ஆர்டர் கிடைப்பது கடினமாகும்.
மேலும்
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்