வழக்கை வாபஸ் பெற மிரட்டல்:தொழிலாளி கைது

கரூர்,: கரூர், வேம்பு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்ல பாண்டியன், 51; ஓட்டல் தொழிலாளி. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப்குமார், 30; டிரைவர். இருவரும் கடந்தாண்டு ஜூலை, 1ல், அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.


புகார்படி கரூர் மகளிர் போலீசார் செல்ல பாண்டியன், பிரதீப் குமார் ஆகியோரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
சமீபத்தில் ஜாமினில் இருந்து வெளியே வந்த செல்ல பாண்டியன் கடந்த, 29ல், சிறுமி வீட்டுக்கு சென்று, அவரது தாயிடம் வழக்கை வாபஸ் பெற சொல்லி அடித்து உதைத்து மிரட்டியுள்ளார். இது குறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் செல்ல பாண்டியனை கைது செய்தனர்.

Advertisement