நியூட்ரிசன் சென்டர் நடத்தி வந்தவர் சங்ககிரியில் படுகொலை
சங்ககிரி,: சங்ககிரியில், நியூட்ரிசன் சென்டர் நடத்தி வந்தவர், மர்மமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே பக்காலியூர், அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 63. இவர், சங்ககிரியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில், ஆர்.டி.ஓ., அலு-வலகம் முன், ஸ்டேட் பேங்க் அருகில், தனியாக வீடு வாட-கைக்கு எடுத்து, உடல் எடையை குறைக்கும் நியூட்ரிசன் சென்டர் நடத்தி வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவி, அரவிந்தன் என்ற மகன், கார்த்திகா என்ற மகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னையால், 30 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலம் சம்பந்தமான பிரச்னை இருந்து வந்ததாக கூறப்ப-டுகிறது. இது தொடர்பாக, இரு ஆண்டுகளுக்கு முன், ராஜேந்தி-ரனை சிலர் தாக்கியதாகவும், இது குறித்து வழக்கு நடந்து வருவ-தாகவும் கூறப்படுகிறது.
உடல் எடையை குறைக்கும் வகையில், நியூட்ரிசன் சென்ட-ருக்கு தினமும் சிலர் வந்து அதற்கான மருந்துகளை வாங்கி செல்-வது வழக்கம். நேற்று வழக்கம் போல, நியூட்ரிசன் சென்டருக்கு பழனியம்மாள் என்ற பெண் காலை, 9:30 மணிக்கு வந்தபோது, உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்களுடன் ராஜேந்திரன் சடலமாக கிடப்பதை பார்த்து,
அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர், சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம் கோயல், சங்ககிரி டி.எஸ்.பி., சிந்து உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சட-லத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு மருத்துவ-மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோப்ப நாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து, அருகி-லுள்ள 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்து, கொலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இது குறித்து, ராஜேந்திரன் மனைவி ராணி கொடுத்த புகார்படி, சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும்
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்