'மவுனம் எல்லாம் நன்மைக்கே' செங்கோட்டையன் பளிச் பதில்

ஈரோடு,: சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செங்-கோட்டையன் கோபியில் இருந்து ஈரோட்டுக்கு நேற்றிரவு வந்தார். ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கு காத்திருந்த நிருபர்களிடம் பேசாமல், நடைமேடையில் வேகமாக நடந்து சென்றவரிடம், ''டில்லி சென்-றதன் காரணம் என்ன? யாரை சந்தித்தீர்கள். ஏன் மவுனமாகவே இருக்கிறீர்கள்,'' என நிருபர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.


எந்த பதிலும் சொல்லாமல் சென்ற செங்கோட்டையன், ரயில் அருகே சென்றதும், ''மவுனம் எல்லாம் நன்மைக்கே,'' என்று கூறி-விட்டு ரயிலில் ஏறிவிட்டார். வழக்கமாக அவர் சென்னை செல்-லும்போது, 10க்கும் குறைவானவர்களே உடன் வருவர். ஆனால், நேற்று, 100க்கும் மேற்பட்டோர் தனித்தனியாக வந்திருந்தனர்.

Advertisement