காளை முட்டி தொழிலாளி உயிரிழப்பு
திருப்பத்துார்,: திருப்பத்துார் அருகே, காளை விடும் விழாவில், காளை முட்டி படுகாயமடைந்த தொழிலாளி உயிரிழந்தார்.
திருப்பத்துார் மாவ ட்டம், பெருமாப்பட்டு கிராமத்தில் கடந்த, 29 ல் காளை விடும் விழா நடந்தது. இதில், திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், கிருஷ்ணகிரி, ஆந்திரா உள்ளிட்ட பல்-வேறு பகுதிகளிலிருந்து, 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்-றன. இதை பார்க்க சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அப்போது, திருப்-பத்துார் அடுத்த மாடப்பள்ளி பஞ்., அம்பேத்கர் புரத்தை சேர்ந்த தொழிலாளி ரஞ்சித்குமார், 37, என்பவர் விழாவை பார்த்து கொண்டிருந்தார்.
வாடிவாசலில் திறந்து விடப்பட்ட காளை ஒன்று, திடீரென பார்-வையாளர்கள் கூட்டத்தில் புகுந்து, ரஞ்சித்குமாரை கொம்பால் குத்தியது. இதில் படுகாயமடைந்த அவர், சென்னை அரசு மருத்-துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். திருப்-பத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்