3 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு விழுப்புரத்தில் 2 சிறுவர்கள் கைது
விழுப்புரம் : விழுப்புரம் அருகே 3 அரசு விரைவு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஒன்று நேற்று சென்றது. திருவாரூர் மாவட்டம், முகுந்தனுார் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் மார்டின், 52; கண்டக்டராக பணியில் இருந்தார்.
மதியம் 1:30 மணிக்கு விழுப்புரம் சுந்தரிபாளையம் அருகே வந்த போது, அதே கிராமத்தை சேர்ந்த 12 முதல் 16 வயதுடைய சிறுவர்கள் 4 பேர் பஸ்சை மறித்து பின்பக்க கண்ணாடியை உடைத்தனர்.
கண்டக்டர் ஜேம்ஸ் மார்டின் தட்டி கேட்டபோது, 4 சிறுவர்களும் சேர்ந்து தாக்கி மிரட்டல் விடுத்தனர். அப்போது, பின்னால் வந்த மேலும் 2 அரசு விரைவு பஸ்களின் கண்ணாடிகளையும் சிறுவர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு, தப்பியோடினர்.
கண்டக்டர் ஜேம்ஸ் மார்டின் அளித்த புகாரின்பேரில், நான்கு சிறுவர்கள் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேரை கைது செய்தனர்.
மேலும்
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்