உத்திரகோசமங்கை கோவிலுக்கு பட்டு சேலை வழங்கல்

புதுச்சேரி : திருச்சி சாரதாஸ் நிறுவனம் சார்பில், ராமநாதபுரம் உத்திரகோச மங்கை கோவிலுக்கு பட்டு சேலை மற்றும் ஹோம வஸ்திரங்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில், உத்திரகோச மங்கை, மங்களாம்பிகை உடனுறை மங்களநாதர் கோவில் உள்ளது.

இக்கோவிலில், கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

அதையொட்டி, திருச்சி சாரதாஸ் நிறுவனம் சார்பில், நிறுவனத்தின் சொந்த தறியில் நெய்த பட்டுச்சேலை, மற்றும் ஹோம வஸ்திரங்கள் கோவிலுக்கு வழங்கப்பட்டது.

இந்த பொருட்களை, சாரதாஸ் நிறுவன அதிபர் ரமேஷ், வினோத்குமார் ஆகியோர், கோவில் தலைமை குருக்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோ ஆகியோரிடம் வழங்கினர்.

Advertisement