சகோதரியை கொன்ற சகோதரனுக்கு தண்டனை ரத்து
பெங்களூரு: பணம் தராத சகோதரியை கொன்ற சகோதரனுக்கு, விசாரணை நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
உடுப்பி மாவட்டம், குந்தாபூரை சேர்ந்தவர் அன்னப்பா பண்டாரி. சலுான் நடத்தி வந்தார். 2018 ஜூலை 22ல், தன் மூத்த சகோதரி விஜயா பண்டாரியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்தார்.
கோபமடைந்த அன்னப்பா பண்டாரி, சகோதரியின் கழுத்திலும், முதுகிலும் கத்தியால் குத்தினார். சிகிச்சை பலனின்றி, விஜயா மருத்துவமனையில் உயிரிழந்தார்.
வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அன்னப்பாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில், அன்னப்பா மேல் முறையீடு செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'கத்தியால் குத்தியதில் சகோதரி இறக்கவில்லை. மாரடைப்பால் உயிரிழந்தார்' என்று மருத்துவர் கூறியதால், அன்னப்பாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்தது.

மேலும்
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்