தங்கவயல் டி.எஸ்.பி.,க்கு முதல்வர் பதக்கம்

தங்கவயல்: கர்நாடக போலீஸ் துறையில், 2024ம் ஆண்டில் சிறந்த சேவை செய்த 197 பேருக்கு 'முதல்வர் பதக்கம்' வழங்கப்படுகிறது.

இவர்களில் தங்கவயல் டி.எஸ்.பி., பாண்டுரங்காவும், 56, ஒருவர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சென்ற அமைதிப் படையில் இரண்டு ஆண்டுகள்; என்.எஸ்.ஜி., கமாண்டோ படையில் 4 ஆண்டுகள்; பொக்ரேன் அஸ்வமேதா ஆப்பரேஷன் பிரிவில் இரண்டு ஆண்டுகள் உட்பட என ராணுவத்தில் மட்டுமே 10 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். ராணுவத்தில் பணியில் இருந்தபோது, இவருக்கு 'யுத்த பதக்கம்' வழங்கப்பட்டது.

இதை அடுத்து, தலா 8 ஆண்டுகள் எஸ்.ஐ., மற்றும் இன்ஸ்பெக்டர் பணியிலும்; 10 ஆண்டுகள் டி.எஸ்.பி.,யாகவும் சேவை செய்துள்ளார். தற்போது தங்கவயல் போலீஸ் மாவட்ட டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வருகிறார்.

போலீஸ் துறையில் முதல் முறையாக கோலாரில் எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தார். சித்ரதுர்கா, யாத்கிரி மாவட்டங்களிலும் பணியாற்றி உள்ளார்.

Advertisement