மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி

பெங்களூரு: 'மஹாபாரதத்தை வென்றது கிருஷ்ணனும், அர்ஜுனனும் தான். சகுனியும், திருதராஷ்டிரனும் அல்ல' என, பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.
தன் 'எக்ஸ்' பக்கத்தில் எத்னால் வெளியிட்டுள்ள பதிவு:
யுகாதி புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி கொண்டு வரட்டும். இந்தாண்டு விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மக்களுக்கு சேவை செய்யாதோருக்கும், மாநில மக்களின் துன்பங்களுக்கு குரல் கொடுக்காதோருக்கும், தங்கள் சொந்த அரசியல் முன்னேற்றத்துக்காக, சமரச அரசியலில் ஈடுபடுவோருக்கும் எதிரான என் போராட்டம் தொடரும்.
மஹாபாரத போரில் கிருஷ்ணரும், அர்ஜுனனும் தான் வென்றனர். சகுனியும், திருதராஷ்டிரனும் அல்ல. ராமராஜ்யம் நிறுவுவது, வடக்கு மாவட்டங்கள் மேம்பாடு, நீர்ப்பாசனம், பசு பாதுகாப்பு, கன்னட மொழி தேர்வு எழுதுவோர் எதிர்கொள்ளும் அநீதி, பிரசவத்தில் பெண்கள் இறப்பு, லவ் ஜிகாத், வக்ப் ஆகியவற்றுக்கு எதிரான என் போராட்டத்தை தீவிரப்படுத்துவேன்.
சமூக ஊடகங்கள் மூலம் எனக்கு வாழ்த்து, ஊக்கம், ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும்
-
பிரியாணி, சவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி; பிலால் ஹோட்டலுக்கு சீல்
-
அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை சந்திப்பு
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா