கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!

19

கோவை: கோவையில் சாலை விரிவாக்கத்துக்காக 1342 மரங்கள் வெட்டி அகற்றப்பட இருக்கின்றன.


@1brமேட்டுப்பாளையம் அவிநாசி இடையே உள்ள சாலை அகலப்படுத்தப்படுகிறது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சாலை விரிவாக்க பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக, சாலையோரத்தில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.


அதன் முக்கிய கட்டமாக, நரியம்பள்ளி-மேட்டுப்பாளையம் இடையே உள்ள 1342 மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. 146 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை அகற்றும் பணிகளில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் இறங்கி உள்ளனர்.


தற்போது இந்த பகுதியில் உள்ள இருவழிச்சாலை 7 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கிறது. தற்போது, 16.2 மீட்டராக அகலப்படுத்தப்படுகிறது.


இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நரியம்பள்ளி, மேட்டுப்பாளையம் இடையே சாலைகளை அகலப்படுத்தும் பணிக்காக 1342 மரங்களை அகற்றும் பணிகளில் இறங்கி இருக்கிறோம். இந்த 4 வழிச்சாலை 16.2 மீட்டர் அகலம் கொண்டது.


இந்த சாலையில் நடுவில் தடுப்பும் அமைக்கப்பட உள்ளது. அத்திக்கடவு, அவிநாசி திட்டத்துக்காக போடப்பட்டுள்ள குழாய்களை அகற்றவும், அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement