ரத்தன் டாடாவின் ரூ.4,000 கோடி சொத்து யார் யாருக்கு? சமையல் காரருக்கு 1 கோடி, செல்ல நாய் பராமரிப்புக்கு 12 லட்சம் என தாராளம்

மும்பை: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது ரூ.4000 கோடி சொத்துகளை உயில் எழுதியுள்ளார். அதில் தனது செல்ல நாயின் பராமரிப்புக்கு ரூ.12 லட்சமும், சமையல்காரருக்கு ரூ.1 கோடி, உணவு பரிமாறுபவருக்கு ரூ.66 லட்சம் என தாராளமாக வழங்கியுள்ளார். மேலும், 'எனது உயிலை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றால், அப்படி செல்பவருக்கு எனது சொத்தில் எந்த உரிமையும் கிடையாது' என ரத்தன் டாடா நிபந்தனை எழுதி வைத்துள்ளார்.
பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் உட்பட அவரது சொத்துகளின் மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. அந்த சொத்துக்கள் யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று ரத்தன் டாடா உயில் எழுதி இருந்தார்.
அவர், 'அவருக்கு கடைசி காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, அவரது சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா (தாயின் இரண்டாது திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள்) ஆகியோருக்கு சொத்துக்கள் கிடைக்கும்படி செய்து இருந்தார்.
தற்போது ரத்தன் டாடாவின் இரண்டு சகோதரிகளான மிஸ்திரி மற்றும் டாடா டிரஸ்ட்ஸ் அறங்காவலர் டேரியஸ் ஆகியோர் அவரது உயிலை நிறைவேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உயிலை நிறைவேற்ற தங்கள் நேரத்தையும், முயற்சியையும் அர்ப்பணித்ததற்காக அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பாராட்டு தொகையாக வழங்கப்பட்டது.
'எனது இந்த கடைசி உயிலை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றால், அந்த நபருக்கு நான் வழங்கிய சலுகைகள் திரும்ப பெறப்படும். எனது சொத்தின் எந்த பகுதியிலும் அந்த நபருக்கு எந்த உரிமையும் கிடையாது' என ரத்தன் டாடாவின் பிப்ரவரி 23ம் தேதி 2022ம் ஆண்டு தேதியிட்ட உயில் கூறுகிறது. தற்போது ரத்தன் டாடாவின் உயிலை நிறைவேற்றுபவர்கள் அதை உறுதிப்படுத்த மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
தற்போது , ரத்தன் டாடாவின் நண்பர் ரூ.6.16 கோடி மதிப்புள்ள சொத்தையும், மூன்று துப்பாக்கிகளையும் பெறுகிறார். ரத்தன் டாடாவின் இரண்டு சகோதரிகளும் அவரது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை பெறுகிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தன் டாடாவுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் தனது செல்ல நாயை மிகவும் பாசமாக வளர்த்தார். மேலும், ஆதரவற்ற நாய்களையும் கவனித்துக்கொண்டார். தனது செல்ல நாயின் பராமரிப்புக்காக 12 லட்சம் ரூபாய் உயிலில் ஒதுக்கியுள்ளார்.
நீண்ட காலமாக தனது வீட்டில் சமையல் செய்த ராஜன் ஷாவுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகையை வழங்க உயிலில் குறிப்பிட்டுள்ளார். இதில் ரூ.51 லட்சம் கடன் தள்ளுபடியும் அடங்கும். அவர் வீட்டில் சாப்பாடு பரிமாறும் சுப்பையா என்பவர் ரூ. 66 லட்சத்தை பெற உள்ளார். இதில் ரூ. 36 லட்சம் கடன் தள்ளுபடியும் அடங்கும்.


மேலும்
-
பிரியாணி, சவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி; பிலால் ஹோட்டலுக்கு சீல்
-
அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை சந்திப்பு
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா