ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் கிளை பணிமனையை சேர்ந்த அரசு டவுன் பஸ் ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது.


சேலம் மாவட்டம், ஆத்தூர் கிளை பணிமனையை சேர்ந்த அரசு டவுன் பஸ், கைகளத்தூர் - நூத்தப்பூர் சாலையில், இன்று (ஏப்ரல் 01) அதிகாலை, 5:00 மணியளவில், ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.


சிறுநிலா பஸ் ஸ்டாப் நோக்கி வந்தபோது மான் கூட்டம் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர், பஸ்ஸை திருப்பினார். கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Advertisement