ஐ.எஸ்.எல்., கால்பந்து: பெங்களூரு அணி வெற்றி

பெங்களூரு: ஐ.எஸ்.எல்., கால்பந்து அரையிறுதிக்கான முதல் சுற்றில் பெங்களூரு அணி 2-0 என, கோவாவை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, பெங்களூருவில் நடந்த அரையிறுதிக்கான முதல் சுற்றில் பெங்களூரு, கோவா அணிகள் மோதின. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் கோவா அணியின் சந்தேஷ் ஜிங்கன் 'சேம்சைடு' கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் பெங்களூரு அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 51வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் எட்கர் மென்டெஸ் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய கோவா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகள் மோதும் 2வது சுற்று போட்டி வரும் ஏப். 6ல் கோவாவில் நடக்கவுள்ளது. இப்போட்டியை 'டிரா' செய்தால் போதும், பெங்களூரு அணி பைனலுக்கு முன்னேறிவிடும்.
மேலும்
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி பேட்டிங்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்
-
வக்பு மசோதாவுக்கு நடிகர் விஜய் எதிர்ப்பு