தங்கம் வென்றார் அன்னு ராணி * இந்தியன் ஓபன் ஈட்டி எறிதலில்...

சங்ருர்: இந்தியன் ஓபன் ஈட்டி எறிதலில் அன்னு ராணி தங்கம் வென்றார்.
பஞ்சாப்பில் இந்தியன் ஓபன் தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. உ.பி., அணியின் அன்னு ராணி 32, 6வது, கடைசி வாய்ப்பில் 56.43 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். கடந்த மாதம் நடந்த இந்தியன் ஓபன் 'த்ரோ' போட்டியில் இவர், 58.82 மீ., துாரம் எறிந்து முதலிடம் பெற்றிருந்தார். ஹரியானாவின் ஜோதி (51.94), ராஜஸ்தானின் உமா சவுத்ரி (50.68) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் உ.பி.,யின் 18 வயது வீரர் திபான்ஷு சர்மா, கடைசி வாய்ப்பில் அதிபட்சம் 75.04 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். இது இவரது சிறந்த செயல்பாடாக அமைந்தது. இதற்கு முன் திபான்ஷு சர்மா, 71.21 மீ., துாரம் எறிந்ததே அதிகம். உ.பி.,யின் மற்றொரு வீரர் ரிஷாப் நெஹ்ரா (72.29), பஞ்சாப் வீரர் மன்ஜிந்தர் சிங் (71.14) அடுத்த இரு இடம் பிடித்தனர்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் ஹரியானாவின் குர்ஜீத் சிங் (1.90 மீ.,) தங்கம் வென்றார். ராஜஸ்தானின் புஷ்பேந்திர குமார் (1.90), இந்திய ராணுவ அணியின் அர்னவ் தியாகி (1.90) அடுத்த இரு இடம் பிடித்தனர்.

Advertisement