ஸ்குவாஷ்: அனாஹத் முன்னேற்றம்

புதுடில்லி: ஸ்குவாஷ் தரவரிசையில் 6 இடம் முன்னேறிய அனாஹத், 62வது இடம் பிடித்தார்.
சர்வதேச ஸ்குவாஷ் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங் 17, 6 இடம் முன்னேறி, முதன் முறையாக 62வது இடம் பிடித்தார். சமீபத்தில் மும்பையில் நடந்த இந்தியன் ஓபன் தொடரில் கோப்பை வென்றதை அடுத்து இந்த முன்னேற்றம் கிடைத்தது. இதுவரை பங்கேற்ற 12 தொடர்களில் இவர், 126 புள்ளி பெற்றுள்ளார். இந்தியாவின் 'சீனியர்' வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, 118வது இடத்தில் உள்ளார்.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் ரமித் டான்டன் அதிகபட்சம் 33வது இடத்தில் உள்ளார். மற்றொரு வீரர் வேலவன் செந்தில் குமார், 39 வது இடத்தில் தொடர்கிறார். இந்தியன் ஓபன் தொடரில் பைனலுக்குள் நுழைந்த அபே சிங், 5 இடம் முன்னேறினார். முதன் முறையாக 'டாப்-50' பட்டியலில் (49) இடம் பிடித்தார்.