ரூ.15 லட்சம் கையாடல் பங்க் மேலாளர் சிக்கினார்

திரு.வி.க.நகர், வியாசர்பாடியை சேர்ந்த முனியாண்டி, 62 என்பவர், வியாசர்பாடி எம்.பி.எம்., தெருவில், பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

இங்கு மேலாளராக, பெரம்பூரை சேர்ந்த கார்த்திகேயன், 23, என்பவர், கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பணிபுரிந்துள்ளார்.

கடந்தாண்டு ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரையிலான வசூல் பணம், 24 லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்தாமல், கார்த்திகேயன் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து, கார்த்திகேயனிடம் கேட்ட போது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, 9 லட்சம் ரூபாயை திரும்ப கொடுத்த நிலையில், மீதி பணத்தை தராமல் தலைமறைவானார்.

இதுகுறித்து, திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில், முனியாண்டி புகார் அளித்தார். அதன்படி விசாரித்த போலீசார், பெரம்பூர், சீனிவாசன் ஆச்சாரி தெருவில் இருந்த கார்த்திகேயனை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement