பெண்ணை வெட்ட முயன்ற மூவர் கைது

வியாசர்பாடி, வியாசர்பாடி, 'பி' கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் அஜித், 21. இவர், மனைவி கீர்த்தனா மற்றும் 4 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார்.

கடந்த 31ம் தேதி இரவு, தம்பதி இருவரும் வீட்டருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த மூவர் தகாத வார்த்தைகளால் பேசி இருவரையும் வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து இருவரும் ஓடி தப்பினர்.

இது குறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து, வியாசர்பாடியைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆகாஷ், 23, பாலாஜி, 27, அஜித், 22 ஆகிய மூவரை கைது செய்தனர்.

Advertisement