தொடர் சிகிச்சையால் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு முன்னேற்றம் ஏற்படும்

ராயபுரம்,உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள், ஒவ்வொரு ஆண்டும் ஏப்., 2ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.
இதில், மருத்துவமனை முதல்வர் மகேஷ், நிலைய மருத்துவ அதிகாரி சாந்திமலர் மற்றும் மருத்துவர்கள், வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
இந்த மையத்தில் வழங்கப்படும் பல்வேறு சிகிச்சைகள் குறித்தும், சிகிச்சையின் மூலம் தங்கள் குழந்தைகள், மற்ற குழந்தைகள் போல இயல்பான நிலைக்கு வர எவ்வாறு உதவியது என்பது குறித்தும், பெற்றோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சி குறித்து, குழந்தைகள் நல மருத்துவ துறை தலைவர் கணேஷ் கூறியதாவது:
கடந்த இரு ஆண்டுகளாக ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள, மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில், ஆட்டிசம் ஆரம்ப அறிகுறிகள் உள்ள, 325 குழந்தைகள் பதிவு செய்து, பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொடர் சிகிச்சைக்கு வரும் குழந்தைகள், நல்ல முன்னேற்றம் அடைகின்றனர்.
2 வயதிற்குள் ஆட்டிசம் உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு, தொடர்ந்து சிகிச்சை அளித்தால், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும்.
வடசென்னையை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு சேவை செய்யும் வகையில், ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் செயல்படுகிறது. ஆட்டிசம் உள்ள குழந்தைகள் இந்த மையத்தை அணுகி பயிற்சி பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி 200 ரன்கள் குவிப்பு
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்