வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு

புதுடில்லி: லோக்சபாவில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்று சேர்ந்து எதிர்ப்பது என ' இண்டி' கூட்டணி கட்சிகள் முடிவு செய்து உள்ளன.
திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை ஏப்ரல் 2ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை விவாதித்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக பா.ஜ., காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகள், தங்களது எம்.பி.,க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்நிலையில், இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி கூட்டணியான ' இண்டி' கூட்டணி தலைவர்கள் டில்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றாக எதிர்ப்பது என அனைவரும் முடிவு செய்தனர்.
இந்த மசோதாவிற்கு எதிராக மத்திய அரசு பிரிவினை திட்டத்தை எடுத்து உள்ளது. இதனை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பணியாற்றும் என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார்.
சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், இம்மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்று விவாதிக்கும். ஆனால், எதிராக ஓட்டளிப்போம் எனக்கூறினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் ஜான் கூறுகையில், விவாதத்தின் போது இம்மசோதாவை கடுமையாக எதிர்ப்போம் என்றார்









