இன்று இனிதாக பகுதிக்கு (02/04/25)
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
ராமர் மண்டப திருமஞ்சனம் - காலை 9:30 மணி. ராமர் நாச்சியார் திருக்கோல பெரிய வீதி புறப்பாடு - மாலை 5:00 மணி. திருமங்கையாழ்வார் ஆஸ்தானம் - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
பங்குனிப் பெருவிழா முன்னிட்டு கிராம தேவதை பூஜை - காலை 9:00 மணி. விநாயகர் வெள்ளி மூஷிக வாகன புறப்பாடு - இரவு 9:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
மருந்தீஸ்வரர் கோவில்
பங்குனிப் பெருவிழா முன்னிட்டு மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா -இரவு 7:30 மணி. இடம்: திருவான்மியூர்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
ராதா -கிருஷ்ண திருக்கல்யாணம் - காலை 9:30 மணி முதல். இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
ஓம் கந்தாஸ்ரமம்
வசந்த நவராத்திரி. சவுத்ரி பிரத்யங்கிரா மூலமந்திரம் - காலை 9:00 மணி முதல். இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
நேச நாயனார் குரு பூஜை - இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
உபன்யாசம்
ஸ்ரீராமநவமி உபன்யாசம், நிகழ்த்துபவர்: உ.வே. அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமிகள் - மாலை 6:30 மணி முதல். இடம்: கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம், சாந்தி நகர், ஆதம்பாக்கம்.
பொது
பெலா பெஸ்ட்
பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' துவக்கம் - மாலை 4:00 மணி. இடம்: அப்டவுன் கத்திப்பாரா, கிண்டி.