போதை மாமனாரை தாக்கிய மருமகன்கள்

கிண்டி,
கிண்டி, நாகிரெட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; பிளம்பர். இவரது வீட்டின் அருகே, அவரது சகோதரி ராதிகாவிடம் போதையில் தகராறு செய்துள்ளார். சமாதானம் செய்தும் அடங்காததால், ஆத்திரமடைந்த ராதிகாவின் மகன்கள் பிரவின், 27, பிரதாப், 25, மற்றொரு சகோதரியின் மகன் சுனில், 22, ஆகியோர் சேர்ந்து, மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். இதில், பலத்த காயமடைந்தவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து விசாரித்த கிண்டி போலீசார், நேற்று, மூன்று பேரையும் கைது செய்தனர்.

Advertisement