திருமுடிவாக்கத்தில் தி.மு.க., பொது கூட்டம்

குன்றத்துார், தமிழக முதல்வர் ஸ்டாலினின், 72வது பிறந்த நாளை முன்னிட்டு, குன்றத்துார் ஒன்றியத்தில், மார்ச் 1ம் தேதி முதல் பொதுக்கூட்டம், பயிற்சி பாசறை கூட்டம், கிரிக்கெட், கபடி போட்டிகள், ரத்த தான முகாம், மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடும் விழா உள்ளிட்டவை நடந்தன.

மார்ச் 31ம் தேதி, நிறைவு நிகழ்ச்சியாக குன்றத்துார் அருகே உள்ள திருமுடிவாக்கத்தில், பொதுக்கூட்டம் நடந்தது. இதில், குன்றத்துார் தெற்கு ஒன்றிய செயலர் படப்பை மனோகரன் தலைமை தாங்கினார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலர், அமைச்சர் அன்பரசன், தி.மு.க., பேச்சாளர்கள் கந்திலிகரிகாலன், முரசொலிமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். இதில், கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Advertisement