மார்ச்சில் 92.10 லட்சம் பேர் பயணம் 'மெட்ரோ'வில் 6 லட்சம் அதிகரிப்பு
சென்னை,சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாதத்தில் மட்டும், 92.10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னையில், தற்போது இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் மூன்று லட்சம் பேர் பயணித்து வருகின்றனர்.
விரைவான, பாதுகாப்பான சேவை கிடைப்பதால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த ஜனவரியில், 86,99,344 பேரும்; பிப்ரவரியில், 86,65,803 பேரும் பயணம் செய்துள்ளனர். இதற்கிடையே, மார்ச்சில், 92 லட்சத்து, 10,069 பேர் பயணம் செய்துள்ளனர். இதன்படி, பயணியர் எண்ணிக்கை 6 லட்சம் பேர் அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, மார்ச் 7ல், மூன்று லட்சத்து, 45,862 பேர் பயணம் செய்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த மார்ச்சில், க்யூ.ஆர்., குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி, 39 லட்சத்து, 65,992 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி, ஒன்பது லட்சத்து, 81,849 பேரும், டோக்கன்களை பயன்படுத்தி, 9,492 பேரும், குழு டிக்கெட் முறையை பயன்படுத்தி, 280 பேரும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி, 42 லட்சத்து, 52,456 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
இந்திய என்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி வழங்க குறுக்கு வழி! சோரஸ் அறக்கட்டளை தில்லாலங்கடி அம்பலம்
-
வக்ப் அமைப்புகளை பாதுகாப்பதில் தனி கவனம் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
-
பெரம்பலுாரில் மாணவியரை கடித்த விடுதி சமையலர் கைது
-
ஊட்டி, கொடைக்கானலில் 'புனிகுலர்' ரயில் இயக்க ஆய்வு
-
அணைப்பட்டி கோயில் அருகே பூங்கா அமைக்க கோரிக்கை
-
காரைக்குடியில் திருமண மண்டபம் எம்.எல்.ஏ., கோரிக்கை