தனியார் எஸ்டேட்டில் திருட்டு


தனியார் எஸ்டேட்டில் திருட்டு


தேன்கனிக்கோட்டை:உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகுல் குப்தா, 50. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் வசிக்கிறார். தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளி அருகே பண்டேயூர் கிராமத்தில் இவருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. அங்கு, கொய்யா, பப்பாளி போன்ற பல்வேறு வகையான மரங்களை வளர்த்து வருகிறார்.
எஸ்டேட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த யூ.பி.எஸ்., மற்றும் 'சிசிடிவி' கேமரா, மின் மோட்டார், பேனல் போர்டு மற்றும் அங்கிருந்த வீட்டின் கூரையை உடைத்து, சிலிண்டர், பாத்திரங்கள் போன்றவற்றை திருடி சென்றனர். இதன் மதிப்பு, 2 லட்சம் ரூபாய். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement