தட்சசீலா பல்கலை மாணவர் இந்திய அணியில் விளையாட தேர்வு

விழுப்புரம்: ஓங்கூரில் உள்ள தட்சசீலா பல்கலைக்கழகம் தமிழ் துறை மாணவர் சச்சின் சர்வேதச கபடி போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட தேர்வாகியுள்ளார்.
திண்டிவனம் அருகே ஓங்கூரில் தட்சசீலா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழக மாணவர்கள் தேசிய அளவில் நடக்கும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர்.
தட்சசீலா பல்கலைக்கழகம் தமிழ் துறை முதலாம் ஆண்டு மாணவர் சச்சின், அகில இந்திய பெடரேஷன் மூலம் இந்திய கபடி அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, இந்த மாதம் சர்வதேச போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்கவுள்ளார்.
இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள மாணவர் சச்சினை, பல்கலை வேந்தர் தனசேகரன், இணை வேந்தர்கள் ராஜராஜன், டாக்டர் நிலா பிரியதர்ஷினி, துணை வேந்தர் விவேக் இந்தர் கோச்சர், பதிவாளர் செந்தில், இணை பதிவாளர் ராமலிங்கம், அகாடமிக் டீன் சுப்ரமணியன், கலை, அறிவியல் துறை டீன் தீபா, பொறியியல் துறை டீன் சுபலட்சுமி, மருத்துவ புலங்கள் டீன் ஜெயஸ்ரீ உட்பட பலர் வாழ்த்தினர்.