ஐ.எஸ்.எல்., கால்பந்து: பைனலில் பெங்களூரு

கோவா: கடைசி நேரத்தில் சுனில் செத்ரி கைகொடுக்க, ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலுக்கு பெங்களூரு அணி முன்னேறியது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. கோவாவில் நடந்த முதல் அரையிறுதிக்கான 2வது சுற்றுப் போட்டியில் கோவா, பெங்களூரு அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 49வது நிமிடத்தில் கோவா அணியின் போர்ஜா ஹெர்ரேரா ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய கோவா அணிக்கு 88வது நிமிடத்தில் அர்மான்டோ துரிம் சாதிகு ஒரு கோல் அடித்தார். பின் எழுச்சி கண்ட பெங்களூரு அணிக்கு, 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+2வது நிமிடம்) சுனில் செத்ரி பந்தை தலையால் முட்டி ஒரு கோல் அடித்து கைகொடுத்தார்.


ஆட்டநேர முடிவில் கோவா அணி 2-1 என வெற்றி பெற்றது. அரையிறுதிக்கான முதல் சுற்றில் பெங்களூரு அணி 2-0 என வென்றது. இரண்டு சுற்றுகளில் முடிவில், கோல் அடிப்படையில் பெங்களூரு அணி 3-2 (2-0, 1-2) என்ற கணக்கில் 4வது முறையாக (2017-18, 2018-19, 2022-23, 2024-25) பைனலுக்கு முன்னேறியது.

Advertisement